காசு கொடுத்து தேள் கொட்டிய அனுபவம் வேண்டுமா சதன் ரயில்வேயில் சூப்பர் பாஸ்ட் ரயிலில் பயணியுங்கள் இரண்டு தினங்கள் முன்பு கும்பகோணம் செல்ல வேண்டிய வேலை இருந்தது.. செல்லும்போது தாம்பரத்தில் இருந்து கும்பகோணம் அருமையாக உழவன் ரயிலில் பயணித்தேன்.. இரவு10.50 மணிக்கு தாம்பரத்தில் எடுத்து மிகவும் அழகாக மறுநாள் காலை நான்கு மணிக்கு கும்பகோணம் சிறப்பாக சென்றது. ஐந்தே மணி நேர பயணம்.. கட்டணம் ரூபாய் 200 மட்டுமே. திரும்பி வரும்போது கும்பகோணத்திலிருந்து சூப்பர் பாஸ்ட் ரயில் ராமேஸ்வரம் டு புவனேஸ்வர் பயணித்தேன்.. கும்பகோணத்திற்கு மூன்று 25க்கு வர வேண்டியது நான்கு மணிக்கு வந்தது.. பேருதான் சூப்பர் பாஸ்ட் மாயவரம் சீர்காழி சிதம்பரம் கடலூர் விழுப்புரம் மேல்மருவத்தூர் நிறுத்தியவன்.. (செங்கல்பட்டு தாம்பரத்தில் நிறுத்தம் கிடையாது..) எக்மோருக்கு வந்து சேர்ந்த நேரம் இரவு 10:30.. 6.30 மணி நேர பயணம்.. மற்றும் கட்டணம் ரூபாய் 250.. சரி தாம்பரத்திற்கு நான் திரும்பி வர வேண்டும் என்ன செய்வது எக்மோரில் டிக்கெட் கொடுக்கும் இடத்தை தேடுகிறேன் தேடுகிறேன் தேடிக்கொண்டே இருக்கிறேன்.. கிட்டத்தட்ட தினத்தந்தி ஆபீஸ் பூந்தமல்ல...
Posts
Showing posts from December, 2024